திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கரிகாலன், சிவலிங்கம், குருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் அரசாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும் எனவும் டெங்கு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டபடி thனக்கொலி தொழிலாளர்களை நிரந்தர படுத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து முடிவில் ஊரக உள்ளாட்சித் துறை சங்க முசிறி கிளை பொறுப்பாளர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.