இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் அம்ரித் கலாஷ் என்ற சிறப்பு திட்டம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 400 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் செய்து கொள்ளலாம். அதற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் கீழ் 0.50% அதிகமாக 7.60 சதவீதம் வட்டி பெறுவார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.