சமீபத்தில் ஒடிசாவில் அதி பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டு 288 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஜார்க்கண்டில் மற்றொரு ரயில் விபத்து நூழிலையில் தவிர்க்கப்பட்டது. டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது ரயில்வே கேட்டிற்கும் தண்டவாளத்திற்கும் இடையே டிராக்டர் சிக்கியது.

சந்தால்டி ரயில்வே கிராசிங்கில் கேட் அமைக்கும் போது டிராக்டர் நிலைதடுமாறியதாகவும், லோகோ பைலட் எச்சரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், 45 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது.