அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் எம்எல்ஏ ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் ஒரு மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை. ஆகவே அதிமுக-பாஜக இடையில் மோதலை திசை திருப்பும் வகையில் சோதனை நடைபெறுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.