தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் எஜர் முகூர்த்த வரதராஜனின் வாழ்க்கை வரலாறு மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மை சம்பவ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் ஜாதியை குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி எழுந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர் அவர்கள் குடும்பத்தினர் ஜாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என்றும் தமிழன் மற்றும் இந்தியன் என்று மட்டும் அடையாளப்படுத்தினால் போதும் என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு எழுந்துள்ளதாக தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று கமல்ஹாசனின் பிறந்த நாளில் அவருடைய வீட்டின் முன்பாக அவரின் உருவ  பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். அதாவது நேற்று ‌SDPI அமைப்பினர் கமல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது அவரின் திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்  என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமரன் திரைப்படம் ஒளிபரப்பாகும் தீடர்களில் சர்ச்சை எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.