சர்வதேச அரசியல் பட்டப்படிப்புகளுக்கு லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் 40 பேரை தேர்வு செய்தது. இதில் தமிழகத்திலிருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி லண்டன் சென்றுள்ளார். இந்தப் பட்டப்படிப்பு மூன்று மாதங்கள் நடைபெறும். இதனை முடித்துவிட்டு அண்ணாமலை நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.
அவர் படிப்பை முடித்துவிட்டு திரும்பியதும் ஒவ்வொரு மாவட்ட வாரியாக சென்று மக்களின் குறைகளை கேட்டிருந்து மனுக்களை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் தொகுதியில் பலர் மாற்றப்பட்டு இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலை ஒட்டி முன்னேற்பாடாக அண்ணாமலை மாவட்ட வாரியாக பயணம் மேற்கொள்ள உள்ளார் எனவும் கூறப்படுகிறது.