தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 210 கோடி வசூலித்ததாக வாரிசு பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் திருப்பூர் சுப்பிரமணியம் வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வாரிசு படத்தின் வசூல் குறித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் ரேசில் வாரிசு ஜெயித்ததற்கு காரணம் துணிவு படத்தை விட வாரிசு படத்திற்கு குடும்பம் குடும்பமாக வந்தது தான். முழுமையான வசூல் நிலவரம் தெரிய சில காலங்கள் ஆகலாம். ஆனால் அந்த 210 கோடி போஸ்டர் டிசைன் புருடாவை மட்டும் மன்னிக்கவே முடியாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் வழக்கம் போல் இந்த பதிவிற்கு தளபதி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.