நடிகையான வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மறுபடியும் பாப்புலரானார். இப்போது யூடியூப் சேனல், துணி கடை என பிசியாக இருந்து வருகிறார் வனிதா. மேலும் வனிதா தற்போது நடந்துவரும் பிக் பாஸ் சீசன் 6 பற்றியும் தொடர்ந்து விமர்சனங்கள் சொல்லி வருகிறார். அண்மையில் பிக்பாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் டுவிட் செய்து இருந்தார்.
அதாவது, விக்ரமனுக்கு ஓட்டுபோடுமாறு அவர் கேட்டு இருந்ததற்கு வனிதா கண்டனம் தெரிவித்திருந்தார். அரசியலை எண்டர்டெயின்மென்டில் புகுத்தாதீங்க என வனிதா கேட்டிருந்தார். வனிதாவின் இந்த பேச்சுக்கு அதிகம் மிரட்டல்கள் வந்ததாக புகார் கூறியிருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில் வனிதா பேசியிருப்பதாவது “யாருக்கும் பயந்தவள் நான் கிடையாது. உங்கள் அரசியல் புத்தி என்னனு காலம் காலமாக பாத்திருக்கோம். உங்க அரசியல் எல்லாம் என்னிடம் வச்சிக்காதீங்க” என பதிலடி கொடுத்திருக்கிறார்.
View this post on Instagram