பட வசூல் குறித்து இளைஞர்கள் கவலைப்பட வேண்டாம் என ஆர்.ஜே.பாலாஜி பேசி உள்ளார்.

விஜே-ஆக தனது பயணத்தை தொடங்கி தற்போது நடிகராக வலம் வருகின்றார் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு ரன் பேபி ரன் என பெயரிடப்பட்டிருக்கின்றது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை வெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளதாவது, இப்போதெல்லாம் படத்தின் வசூல் பற்றி இளைஞர்கள் அதிகமாக கவலை படுகின்றார்கள்.

அமெரிக்காவில் எவ்வளவு வசூல்? ஐரோப்பாவில் எவ்வளவு வசூல்? என அவர்களின் நேரமும் ஆற்றலும் வீணா போகின்றது. கோடிகள் செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இது குறித்து கவலைப்படுவார்கள். இளம் தலைமுறையினர் கவலைப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என பேசி இருக்கின்றார்.