தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட சங் பரிவார கும்பல்கள் சிதம்பரம் தொகுதியை குறிவைத்து வேலை செய்து வருவதாக செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.

காட்டுமன்னார்கோவிலில் பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல் கொடுப்பவர் திருமாவளவன். அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என சிலர் கங்கணம் கட்டி உள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க எண்ணுவோர் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.