
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு நாடு முழுவதும் உள்ள இந்து தலைவர்கள் மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவார் என்று இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சீக்கிரம் அனைத்து மாநிலங்களிலும் பிடிவாரண்டு வந்துவிடும்.
அவர் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி. சனாதன இந்து தர்மத்தை நீ டெங்கு கொசு மற்றும் மலேரியா கொசு மாதிரி கொன்று விடுவியா. உங்களுக்கு அவ்வளவு திமிரு இருக்கா. துணை முதல்வர் என்றால் 80 சதவீத மக்களை கொல்லலாமா.? அவர்களையும் டெங்கு மற்றும் மலேரியா கொசு போன்று ஒழிப்பேன் என்று கூறுவாரா.? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அந்த சார் யார் என்று சொல்ல உதயநிதிக்கு துப்பு இல்லை. ஆனால் இந்து மதத்தை கொசு மாதிரி கொல்லலாம் என்று பேசுகிறார். மேலும் இந்த தேச விரோத தீய சக்திகள் 2026 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்படுவார்கள் என்று கூறினார்.