தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை எமிஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் பெற்றோரின் செல்போன் எண் இணைக்கப்பட்டு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட விவரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கட் அடிக்கும் மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் அத்துமீறும் மாணவர்களை அவர்களின் பெற்றோர் மூலம் தண்டிக்கவே இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.