சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி என்பது முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டு தலா 850 கோடி ரூபாய் என ஆண்டுக்கு 1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். சிலர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளனர்.

இது போன்ற நீண்ட கால நிலுவை வைத்துள்ளோர் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதிகபட்ச நிலுவைத் தொகை அடிப்படையில் முதல் 100 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்படலாம் என தெரிகிறது.