தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் வெளியில் விற்பதாகவும் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டுவரப்படும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஆய்வு தொடர்கிறது.