ரிமோட் வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அப்பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி, அக்கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே கடிதம் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

மேலும் அதிமுக-வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்தது. ஆனால் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றும்தான் இருக்கிறது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.