அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துக்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி இருந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் சொகுசு கார்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். லஞ்ச ஒழிப்பு சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்கரின் சொத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. முன்னாள் எம்எல்ஏ கே பி பாஸ்கர் நாமக்கல் நகர அதிமுக தலைவராகவும் உள்ளார்.