ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், மாற்று கட்சியினர் பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியனும் தனது தொண்டர்களுடன்அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது