நாட்டின் பிரபல பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு பைக் ஆகும். இந்த 350 cc பைக், ராயல் என்பீல்டு நிறுவனத்தினுடைய பழம்பெருமை வாய்ந்த மாடலாகும். இந்த பைக்கை வாங்குவது பல பேரின் ஆசையாக இருந்து வருகிறது. புல்லட்டின் சத்தத்தை வைத்து அதனை அடையாளம் கண்டுவிடலாம். இந்த பைக் காலத்துக்கு ஏற்றவாறு சில தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உட்பட்டு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

எனினும் அதன் தோற்றத்தையும், சில தனித்துவ அம்சங்களை மட்டும் அப்படியே வைத்திருக்க முயற்சித்து வருகின்றனர். ராயல் என்பீல்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் அடிப்படையில் “ஆல் நியூ கிளாசிக் 350” பைக்கின் விலையானது ரூபாய். 2.2 லட்சத்தில் துவங்குகிறது. எனினும் இந்த பைக்கின் விலையானது ஒரு காலத்தில் ரூபாய்.18,700 என்று கூறினால் ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த 1986-ம் வருடம் ஜனவரி 23ம் தேதியிடப்பட்ட ஒரு பைக்கின் பில் இப்போது இணையத்தில் வைரலாக பரவி மக்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அதனை விண்டேஜ் பைக் ஆர்வலரான பீயிங் ராயல் என்பவர் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். ஒரு புல்லட் பைக்கின் விலையானது ரூபாய். 18,700 என அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 250 தள்ளுபடி செய்ததையும் பில்லில் குறிப்பிட்டுள்ளனர்.