கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் சியாமளா. இவர் தங்கள் வீட்டில் சுமார் 50க்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டிலுள்ள கோழி முட்டை ஒன்றை இட்டது. ஆனால் அது சாதாரணமான முட்டையை காட்டிலும் பெரியளவில் இருப்பதை கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்.

அதாவது, அந்த கோழி முட்டை 90 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. இந்த விசித்திரமான முட்டையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசளிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முட்டை வேர்ல்ட் வைட் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.