பெங்களூருவைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் சதீஷ். இவர் பெங்களூருவில் உள்ள கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற என்ற நாய் விற்பனை கடையில் உரிமையாளர். அதோடு இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருக்கிறார். இந்நிலையில் தொழிலதிபர் சதீஷ் ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்னுடைய நண்பரிடமிருந்து ரூபாய் 20 கோடி குறித்து காகேஷியன் ஷெப்பர்டு என்ற நாயை வாங்கியுள்ளார்.

இந்த நாய்க்கு தற்போது 1 1/2 வயது ஆகும் நிலையில், கடபோம் ஹைடர் என்று சதீஷ் நாய்க்கு பெயர் வைத்துள்ளார். இந்த வகை நாய்கள் ரஷ்யா, துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா போன்ற நாடுகளில் தான் பெரும்பாலும் காணப்படும். இந்தியாவில் இந்த வகை நாய்களை பார்ப்பது மிகவும் அரிது. மேலும் காகேஷியன் ஷெப்பர்டு இன நாய்கள் தைரியம், தன்னம்பிக்கை, அறிவுத்திறன், பயமின்மை கொண்டவை. இந்த நாய்கள் சுமார் 10 முதல் 12 வருடங்கள் வரை வாழக் கூடியவை ஆகும்.