ஒடிசா மாநிலத்திலுள்ள ரூா்கேலாவில் கட்டப்பட்டு இருக்கும் நாட்டிலேயே மிகப் பெரிய ஹாக்கி மைதானமான பிா்சா முண்டா மைதானத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தாா். ரூபாய்.146 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த மைதானம் 15 ஏக்கா் பரப்பளவை உடையது ஆகும். இங்கு 21 ஆயிரம் பார்வையாளர் இருக்கை வசதி இருக்கிறது.

ஒடிசாவில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பாக நடைபெற உள்ள ஆடவருக்கான உலகக்கோப்பை ஹாக்கி 2023 போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஒடிசாவுக்கு வருகை தந்த ஹாக்கி வீரர்களை, நவீன் பட்நாயக் நேரில் சந்தித்து உரையாடினார். இந்நிலையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் வீரர்களுக்கு தலா ரூபாய்.1 கோடி பரிசாக வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். மேலும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்து உள்ளார்.