சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு தொடர்ந்து பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மகர சங்கரம பூஜை ஜனவரி 14ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு நடைபெற உள்ளதாக தேவஸம்போர்ட் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். என் நிலையில் மாளிகை புரத்தில் வெடி கூடாரத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்ததால் இந்த ஆண்டு வெடி வழிபாடு நடத்த தடை விதிக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.