அடேங்கப்பா…! இவ்வளவு பெரிய வெங்காயமா…? சாதனை படைத்த விவசாயி…!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கரேத் க்ரிஃபின்.  விவசாயியான 9 கிலோ எடையுள்ள மிகப்பெரிய வெங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு  வருடமும்  பிரிட்டனின் ஹரோகேட் மலர் கண்காட்சியில் காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி போட்டியில், மிகப்பெரிய காய்கறிகள், மலர்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

அந்தவகையில் இந்த வருடம் இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷயரில் உள்ள நியூபி ஹால் கார்டனில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கரேத் க்ரிஃபின் என்ற விவசாயி 9 கிலோ எடையுள்ள பெரிய வெங்காயத்தை பயிரிட்டு உலக சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply