உலக அளவில் இந்தியாவை தவிர பல நாடுகளில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தற்போது குவைத் நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்தது போல வேலை நேரத்தை மாற்றம் செய்து கொள்ளும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை தொடங்கிக் கொள்ளலாம் எனவும் பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு விருப்பத்திற்கு ஏற்ப தங்களின் நேரத்தில் வேலை செய்வதால் ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் கட்டாயமாக 7 மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.