தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று தமிழக அரசு உறுதி கொடுத்துள்ளது. அந்த அறிவிப்பின்படி ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15-ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே நிலையில் அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளை மாடுகளுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் காளை மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை மருத்துவரிடம் காண்பித்து உடற்தகுதி சான்றிதழை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.