சென்ற 2016ம் வருடம் நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது. அதற்கு பதில் அரசு புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடித்தது. அண்மையில் உச்சநீதிமன்றமும் பணமதிப்பு நீக்கம் சரியான முடிவு என தீர்ப்பு வழங்கியது. ஒரு நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படுவது இது முதல் முறையல்ல.

இந்த நிலையில் இப்போது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000 ஆகும். RBI சட்டம் 1934 பிரிவு 24ன் அடிப்படையில் RBI-க்கு 2, 5, 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000, 5000, 10000 ரூபாய் நோட்டுகளை அச்சிட உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.