உங்களது வங்கிக் கணக்கிலிருந்து தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு நீங்கள் பணம் அனுப்பி விட்டால் உடனே அத்தகவலை வங்கிக்கு தொலைபேசி (அ) மின் அஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். அதே சமயத்தில் பணம் மாற்றப்பட்ட வங்கியானது உங்களுக்கு உதவும். வங்கியில் தகவல் தெரிவிக்கும்போது, ​​பணப் பரிமாற்றத்தின் தேதி, நேரம், கணக்கு எண், தவறுதலாக பணம் மாற்றப்பட்ட கணக்கு எண் ஆகிய பரிவர்த்தனையின் முழு விபரங்களையும் கொடுக்க வேண்டும். பணம் அனுப்புவோர் மற்றும் பணம் பெறுவோரின் கணக்கு ஒரே வங்கியில் இருந்தால், அதன் செயல்முறை விரைவாக முடிவடையும்.

எனினும் பெறுநரின் கணக்கு வேறு ஏதேனும் வங்கியில் இருப்பின், இச்செயல்முறைக்கு அதிக நேரம் ஆகும். நீங்கள் யாருடைய வங்கிக்கணக்குக்கு தெரியாமல் பணத்தை மாற்றியுள்ளீர்கள் என்பது பற்றியும் வங்கியில் புகாரளிக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் பணத்தை பெறுவோர் பணத்தை திருப்பித் தரத் தயாராக இருக்கிறார். இதற்கிடையில் பணத்தை திருப்பித்தர மறுத்தால், நீங்கள் அவர் மீது வழக்குத் தொடரலாம்.