பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்லா தேவி (32). இவருக்கு பிரமோத் என்பவரோடு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் 2 குழந்தைகளுக்கு தாயான சுக்லா தேவி தனது கணவரின் தங்கை சோனியை காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த திருமணம் சுக்லாவின் கணவர் பிரமோத்தின் சம்மதத்துடனே நடந்திருக்கிறது. தற்போது சுக்லா, சோனி, பிரமோத் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ஆனால் சோனியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.