தொல்காப்பியத்தை கைபேசி செயலி மூலமாக அறிந்து கொள்ளும் விதமாக புதிய வசதியை செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. இது பார்வை திறனாற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தொல்காப்பியம் தமிழில் தோன்றி இன்று கிடைக்கப்பெறும் நூல்களும் மிகவும் பழமையானதாகவும். இதில் இருக்கும் சில வழக்காறுகள் மற்றும் இலக்கணக் கூறுகள் அனைத்தும் இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டவை.

இதனால் அது தமிழ் முதநூல் என போற்றப்படுகிறது. இந்நிலையில் CICT  தொல்காப்பியம் எழுத்து என்ற பெயரில் எழுத்து அதிகாரத்தில் செயலியை கூகுள் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. பார்வை குன்றியவருக்கு இந்த செயலி மிகவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.