விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெண் ஒருவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்திய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த செந்திமயில் என்ற பெண் வீட்டில் சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்தியதால்  உயிரிழந்தார்.

நிலையில் சேத்தூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த மே 27ஆம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்கு வந்த பெண் மருத்துவர் சரணிதா என்பவர் லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.