கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 55 வயதுடைய பெண் வசித்து வருகிறார். அவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அந்த பெண் தனியாக வசித்து வருகிறார். கடந்த 29-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் ஞானகுரு என்பவர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அத்துமீறி நடந்து கொண்டார். அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
மேலும் இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது. அந்த பெண் சம்பந்தப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரிடம் இது பற்றி கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வாலிபரை கண்டிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஞானகுருவை கைது செய்தனர்.