தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் திறந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே விடைத்தாள் மதிப்பெண்களை மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இரண்டாம் பருவ புத்தகங்களையும் அன்றைய தினமே கொடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதன்படி அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்கள் எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.