அக்னிபா திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள முன்னாள் அக்னி வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பி எஸ் எப், ஜெனரல் பியூட்டி கேடர் ஆட்சேர்ப்பு விதிகள், 2015ல் திருத்தம் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மார்ச் ஒன்பதாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். காலியிடங்களில் 10% முன்னாள் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முப்படைகளில் 17 முதல் 21 வயது உட்பட்ட இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அக்னிபா திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.