தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2021 ஆம் ஆண்டு வெளியானது. 2022 ஆம் ஆண்டு படக்குழு டெஸ்ட் சூட் நடத்தி அந்த காணொளியை வெளியிட்டு இருந்தது. ஆனால் அதன் பிறகு இந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டுகளும் வெளியாகவில்லை படப்பிடிப்பும் நடக்கவில்லை.

இந்நிலையில் படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது” என்று குறிப்பிட்டு சூர்யா மற்றும் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதற்கான அப்டேட்டாக இருக்கலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.