செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துரை வைகோ, குறுவைக்கு தமிழக அரசு  13,000 தான் ஒதுக்கி இருக்கிறார்கள். அது குறித்து எங்களுடைய இயக்கம் குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் கொடுக்கணும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.  ஒதுக்கப்பட்ட நிதி குறைவானது தான். கண்டிப்பா மாநில அரசு  விவசாய மக்களின் அவல நிலையை புரிந்து கொண்டு,  குறைந்தபட்சம் ஏக்கருக்கு 20,000 ஒதுக்க வேண்டும்,  அது எங்களுடைய கோரிக்கை..

நதிகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் காவேரி பிரச்சனை. அது தேசிய மையமாக மாற்றிவிட்டால் இந்த பிரச்சினை இருக்காது என்ற கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ,

நதிகளை தேசியமயமாக்கனும்னு சொல்லி இருக்கிறார்.  இந்தியாவிலேயே இந்த கோரிக்கையை முதல் முதல் எடுத்து வச்சது தலைவர் வைகோ தான்.  2000 மே 5இல் நம்முடைய இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை… அதற்கு ஒரு தனி நபர் மசோதாவை… நாட்டுல முதல் கொண்டு வந்தவர் தலைவர் வைகோ தான்.

அந்த தேசிய நதிகளை திட்டத்தை சாத்தியப்படுத்தினால்… இப்ப இந்த கூட்டமே நடக்க அவசியம் கிடையாது.  எப்படி நேஷனல் ஹைவேஸ் என்று சொல்றோமோ, அதே போல  நேஷனல் ரிவர்ன்னு சொல்ல வேண்டிய காலம் வரவேண்டும். அது வந்துச்சுன்னா தான் இது மாதிரி பிரச்சனைக்கெல்லாம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.