Youtuber ஆக விரும்புபவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்

புத்தாக்கம் நிறுவனம் சார்பில் youtuber ஆக விரும்புபவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சொந்தமாக youtube சேனல் உருவாக்கி அதன் மூலம் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து இந்த வகுப்புகளில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் வருகின்ற 29 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த வகுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த வகுப்புக்கு 4000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.