
இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆடு தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஆடு கட்டப்பட்டிருந்த நிலையில் காணப்படுகிறது. அது தன்னை விடுவித்துக் கொள்வதற்காக முதலில் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை தனது வாயால் பிடித்து, அதை மெதுவாக இழுத்து, அந்த கயிற்றை தொங்கவிட்டு பின்னர் தன்னை விடுவித்துக் கொண்டது. மிகவும் நுட்பமாக அந்த ஆடு செய்த செயல் பாராட்டும் வகையில் உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
அதில் ஒருவர் “இப்போதுதான் புரிகிறது ஏன் ஆட்டை GOAT (Greatest of all time) என சொல்றாங்கன்னு” என பதிவிட்டிருந்தார். இன்னொருவர் “இது உண்மையிலேயே ஒரு மாஸ்டர்மைண்ட் ஆடு” என்று கூறியிருந்தார். மேலும் ஆட்டின் புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இந்த வீடியோ மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.