திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார்(27) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.