விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரில் கருப்பசாமி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சிவ பாலன் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனால் மகாலட்சுமி மற்றும் சிவபாலனை அவரது பெற்றோர் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கடைக்கு சென்று வருவதாக தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற மகாலட்சுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மகாலட்சுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மகாலட்சுமியும், குழந்தையையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.