கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி வியாக்கப்பர் சந்திப்பில் இருக்கும் தனியார் ஐஸ் கம்பெனி கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டி கிடந்தது. நேற்று ஐஸ் கம்பெனியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அப்போது அம்மோனியா சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்தபோது அமோனியா வாயு கசிந்தது. அதை சுவாசித்தால் மூச்சு திணறல் ஏற்படும்.

இதுகுறித்து ஐஸ் கம்பெனி உரிமையாளர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அம்மோனியா வாயு வெளியே பரவாமல் இருப்பதற்காக பாதுகாப்பு உபகரணங்களால் கட்டுப்படுத்தி சிலிண்டர் வைக்கப்பட்டு இருந்த அறையை பூட்டினார். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெளியூரிலிருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு வாயு காசியாமல் தடுக்கப்பட்டது.