கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அஸ்வால்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை அஸ்வால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

இந்நிலையில் சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள கல்லூரி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை அந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஸ்வாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.