ஹரியானாவின் பானிபட் (Panipat) கிராமம் ஒன்றில், தனது மகன்கள் உட்பட நான்கு குழந்தைகளைக் கொன்ற வழக்கில், பூனம் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வளவு கொடூரமானச் செயலுக்குக் காரணம், “யாரும் தன்னைவிட அழகாக இருக்கக்கூடாது” என்று அவர் கொண்டிருந்த பொறாமைதான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவில், இவர் தனது 6 வயது உறவுக்காரச் சிறுமியை (மருமகள்) தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார்.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பூனம், இந்தக் கொலைகளைச் செய்ய ‘குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடிப்பது’ என்ற அதே முறையைப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

2023-ஆம் ஆண்டு, இவர் தனதுச் சகோதரியின் மகளையும், தனது சொந்த மகனையும் அதே பாணியில் கொலை செய்துள்ளார். மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘அதிகம் அழகாக இருந்ததால்’ மற்றொரு சிறுமியையும் கொலை செய்துள்ளார்.

இந்தக் குழந்தைகள் இறந்ததெல்லாம் விபத்து என்று நம்பப்பட்ட நிலையில், சமீபத்தியக் கொலை தொடர்பாகப் பூனம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, பொறாமையின் காரணமாகத் தான் இந்தக் கொடூரங்களைச் செய்ததாகக் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.