மாநில வன்னிய சங்கத் தலைவராக பணியாற்றியவர் காடுவெட்டி குரு இவரது மகன் கனலரசன். இவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது தந்தை பாமகவில் இணையாமல் இருந்திருந்தால், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மற்றும்  எல்லா விதத்திலும் வெற்றி பெற்றிருக்க முடியும்.

எனது தந்தை பாமக கட்சியிலேயே தேங்கியிருந்ததால் அவரது வளர்ச்சி அப்படியே நின்று விட்டது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு என கூறிய பாமக நிர்வாகிகள் தாங்கள் நடத்தும் கல்லூரிகளில் எத்தனை வன்னிய சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு இலவசமாக படிப்பை வழங்கி வருகிறார்கள். மேலும் வன்னியர் சமூகத்திற்காக அன்புமணி ராமதாஸ் இதுவரை செய்தது தொடர்பாக என்னுடன் நேரடியான விவாதத்திற்கு தயாரா என்றும் நீங்கள் நடத்தும் கல்லூரிகளில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் எத்தனை பேருக்கு இலவச படிப்பை வழங்கியுள்ளனர் என்பது குறித்தும் விவாதிக்க தயாரா என்று அவர் சவால் விட்டுள்ளார்.