நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தற்போது பொதுமக்கள் ஏடிஎம் நிறுவி அதன் மூலமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் மாதம் தோறும் ரூ.45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சம்பாதித்துக் கொள்ளலாம். தற்போது எஸ்பிஐ ஏடிஎம் உரிமம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காண்போம். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பிப்பதற்கு ஏடிஎம் நிறுவ 50 முதல் 80 சதுர அடி இடம் வைத்திருக்க வேண்டும். அதேபோல் உங்களின் ஏடிஎம் பக்கத்தில் 100 மீட்டருக்குள் எந்த ஒரு ஏடிஎம் இயங்கக் கூடாது.

அதனைத் தொடர்ந்து உங்களின் ஏடிஎம் சேவை நாள் ஒன்றுக்கு 300 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் என உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் நீங்கள் ஏடிஎம் நிறுவ அதிகாரிகளிடம் சான்றிதழ், தடையில்லா சான்றிதழ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பெற வேண்டும். எஸ் பி ஐ ஏ.டி.எம் உரிமையை பெறுவதற்கு தங்களின் பேன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டணம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்றாக வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், தங்களின் மின்னஞ்சல் ஐடி போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.