
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வாகவில் நகரத்தில் வசிக்கும் கென் வில்சன், 18 ஆண்டுகளாக தற்செயலாக தனது அண்டை வீட்டாரின் மின்சாரக் கட்டணத்தை செலுத்தி வந்துள்ளார். பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி (PG&E) வாடிக்கையாளரான வில்சன், சமீபத்தில் தனது மின்சார நுகர்வில் அதிகரிப்பு கவனித்தார். இதைத் தீர்மானிக்க, அவர் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார்.
அந்த சாதனத்தை பயன்படுத்தியபோது, அவரது பிரேக்கர் ஆஃப் இருந்தபோதும், மீட்டர் இயங்குவதை வில்சன் கண்டுபிடித்தார். இதனால் அவர் PG&E நிறுவனத்தை தொடர்பு கொண்டார், இதைத் தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தி, 2009-ம் ஆண்டு முதல் வில்சனின் மீட்டர் அண்டை வீட்டிற்கு மின்சாரத்தை அளித்து வந்தது தெரியவந்தது.
தவறை உணர்ந்த பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி, வில்சனுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.