WWE சூப்பர்ஸ்டார் “Bray Wyatt” என அழைக்கப்படும் Windham Rotunda(36), மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாக இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், கடந்த 6 மாதங்களாக WWE இருந்து விலகி இருந்ததாக கூறப்படுகிறது. இவர், 2017 ஆண்டுக்கான WWE சாம்பியன் பட்டம் உட்பட பல சாதனைகளை படைத்து உள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்