பழங்கால கோட்டைகளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான பூட்டு ஒன்றின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அந்தக் காலத்தில் மன்னர்கள் கட்டிய கோட்டைகளின் கதவுகள் மிகப்பெரிய அளவில் இருப்பதால், அவற்றைப் பூட்டுவதற்கு சுமார் 15 கிலோ எடை கொண்ட ராட்சத பூட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
🔴अब ये ताला 1 साल बाद खुलेगा
दुनिया का सबसे बड़ा ताला , हैरान हो जाओगे देखकर
किला टूट जाएगा पर ताला नहीं😂 pic.twitter.com/n2RTT7DU7D
— AarifSpeaks (@AarifSpeaks) January 18, 2026
வைரலாகி வரும் இந்தக் காணொளியில் ஒரு நபர் தனது இரண்டு கைகளாலும் அந்தப் பூட்டைத் தூக்கிக் காண்பிப்பதோடு, அதன் தனித்துவமான செயல்பாடுகளையும் விளக்குகிறார். ஒருமுறை பூட்டப்பட்டால் நீண்ட காலத்திற்குப் பிறகே திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பூட்டுகளின் உறுதித்தன்மை மற்றும் அதன் நுணுக்கமான தொழில்நுட்பம் குறித்து இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே இவ்வளவு வலிமையான பாதுகாப்பு வசதிகளை நம் முன்னோர் உருவாக்கியுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகப் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
