அமெரிக்க நாட்டில் காளி ஜோ ஸ்காட் என்ற பெண்மணி டெக்சாஸில் புத்தாண்டு இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் இந்த குழந்தைகள் தனித்தனி வருடங்களில் பிறந்ததாக தி நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது அந்தப் பெண்மணி 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்கு அண்ணி ஜோ என்ற முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன் பிறகு ஜனவரி 1-ஆம் தேதி 2023-ம் ஆண்டு நள்ளிரவு 12.01 மணிக்கு எபி ரோஸ் என்ற இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த 2 குழந்தைகளும் பிறந்ததற்கான நேர வேறுபாடு 6 நிமிடங்கள் ஆகும். மேலும் தங்களுக்கு வெவ்வேறு வருடங்களில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சி சம்பவத்தை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.