ஜப்பானில் உள்ள நாரா பூங்காவில் இருந்த எடுக்கப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 2 மான்கள் போக்குவரத்து சிக்னல் பச்சை நிறமாக மாறுவதற்கு முன்பு ஆவலுடன் சாலையின் அருகே காத்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் பச்சை நிற சிக்னல் வந்ததும் சாலையை மக்கள் கடப்பது போல விதிகளை பின்பற்றி கடக்கின்றனர். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ameana Finds (@amina_finds)

வீடியோவில் உள்ள மான்கள் தங்கள் ஒழுக்கமான நடத்தையால் இணைய மக்களின் இதயங்களையும் வென்றது. மேலும் மக்கள் அவைகளை பாராட்டி வருகின்றனர். ஜப்பானின் நாரா பூங்கா அதன் சிகா மான்களுக்கு பெயர் பெற்றது. அவை புனிதமாக கருதப்படுகின்றன. மேலும் அவை சுகந்திரமாக சுற்றி திரிகிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் கைகளால் அவற்றுக்கு உணவளிப்பார்கள். அதற்கு ஈடாக ஆண்களும் தலைவணங்கி தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த பிறகு மக்கள் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.