தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து ஏகே 62 படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய புகைப்படம் அடிக்கடி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் ஏகே 62 திரைப்படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.